fbpx

சும்மா சும்மா பிரச்சனை பண்ணிட்டே இருக்க நீ…..? கணவனை போட்டு தள்ளிய மனைவி….!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கணேசபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாலமுருகன் (47) இவருக்கு போது மணி என்ற மனைவி மற்றும் சூரிய சுகம் உள்ளிட்ட இரண்டு மகன்களும் நாகஜோதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தான் மகள் நாகஜோதி திருமணம் முடிந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். மூத்த மகனான சூர்யா குடும்பத்துடன் தந்தையுடனே கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.

2வது மகனான சுகம் கோவையில் இருக்கின்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், பாலமுருகன் மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகனிடம் அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான் நேற்று இரவும் மது குடித்துவிட்டு வந்து வழக்கம் போல மனைவி மற்றும் மகன் சூர்யாவிடமும், வெளியூரில் இருந்து வந்திருந்த மகன் சுகனிடமும் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரம் கொண்ட தாய் மற்றும் 2 மகன்களும் சேர்ந்து கயிற்றால் பாலமுருகனின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தூக்கு மாட்டி பாலமுருகன் தற்கொலை செய்து கொண்டு இருப்பதாக நாடகமாடினர். இதனைத் தொடர்ந்து, சித்தார் கட்டி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகனின் சாவில் மர்மம் இருப்பதாக கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

அந்த புகாரின் அடிப்படையில், மூவரையும் அழைத்து வந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சந்தையை மனைவி மற்றும் இரு மகன்களும் சேர்ந்து கொலை செய்து நாடகம் ஆடினர் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து. அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தலைவரை குடும்பத்தினரை கொலை செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

கல்விக் கடன் வாங்கும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!! வட்டி விகிதங்கள் எப்படி இருக்கும்..?

Tue Jul 4 , 2023
கல்வி போல் செல்வம் ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட கல்வியை இயலாதவர்களுக்கு சாத்தியமாக்குகிறது கல்விக் கடன்கள். இதனால், அவர்கள் விரும்பும் படிப்புகளை கல்லூரிகளில் தொடர முடிகிறது. இருப்பினும், வட்டி விகிதம், கடன் திரும்ப செலுத்தும் காலம் என பல காரணிகள் இதில் உள்ளது. எனவே, அதிகப்படியான செலவினங்களைத் தவிர்க்க கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது கவனமுடன் இருப்பது அவசியம். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பின்வருபவற்றை கவனமாக ஆராய்ந்து கொள்ளுங்கள். என்னென்ன தகுதிகள் […]

You May Like