fbpx

“உல்லாசத்துக்கு மட்டும் தான் நீ, கல்யாணத்துக்கு இல்ல” காதலித்த பெண்ணிற்கு, நபர் செய்த கொடூரம்..

டெல்லி காஜிபூரில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் பாதி எரிந்த சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும், அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சூட்கேஸை கைப்பற்றினர்.

தொடர்ந்து, போலீசார் அந்த சூட்கேஸை சோதனை செய்ததில், உள்ளே எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சூட்கேஸ் கிடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் ஹூண்டாய் வெர்னா கார் ஒன்று அப்பகுதியில் சென்றுள்ளது.

இதையடுத்து, போலீசார் அந்த காருக்கு சொந்தக்காரரான அமித் திவாரி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சூட்கேஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது, அமித் திவாரியின் உறவுக்கார பெண், 22 வயதான ஷில்பா. அமித் திவாரியும், ஷில்பாவும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகக் காதலித்து வந்துள்ளனர்.

மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில், ஷில்பா அமித் திவாரியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமித் திவாரி, குடித்து விட்டு ஷில்பாவிடம் தகறாறு செய்துள்ளார். மேலும், ஷில்பாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அவர் ஷில்பாவின் உடலை சூட்கேசில் வைத்து பூட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அவர் தனது நண்பரான டாக்சி டிரைவரின் உதவியுடன் சூட்கேஸை காரில் கொண்டு சென்று காஞ்சிபுரம் அருகே வைத்து தீ வைத்து எரித்துள்ளார். இதையடுத்து, போலீசார் கொலை செய்த அமித் திவாரி மற்றும் அவரது நண்பரான டாக்ஸி டிரைவர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: “விஷால் நடிகைகளை கட்டி அரவணைப்பதை தவறாக நினைக்க கூடாது” பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி..

English Summary

man killed his lover who asked him to marry him

Next Post

"எனக்கு என்னோட குழந்தை வேணும் சார்" கதறி துடிக்கும் தாய்.. வேலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Wed Jan 29 , 2025
3 years old girl was missing who played outside the home

You May Like