ஆந்திர மாநிலத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி பெரும் பரபாரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு வெங்கட மாதவி என்ற மனைவி உள்ளார். தெலங்கானாவின் மேட்சலில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு, 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தனது மனைவியின் நடத்தையில், குருமூர்த்திக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகைக்காக, குருமூர்த்தி தனது குழந்தைகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். மேலும், கடந்த 16ம் தேதி வழக்கம் போல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பண்டிகைக்காக மாதவியின் பெற்றோர் போன் செய்த போது மாதவி போன் எடுக்கவில்லை. இதனால் மாதவியின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாதவியின் பெற்றோர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குருமூர்த்தியிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொளை செய்து விட்டு, துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துள்ளார். பிறகு, யூடியூப் மற்றும் ஆங்கில படங்களை பார்த்து எலும்புகளை எப்படி கரைப்பது என்பதை கற்றுகொண்டார்.
பின்னர் சோதனை முயற்சியாக, தெரு நாயை கொன்று குக்கரில் வேகவைத்து, வெயிலில் காயவைத்துள்ளார். பின்னர் அதனை தூள் தூளாக நொறுக்கி, அந்த பொடியை கால்வாயில் கரைத்துள்ளார். அவரது இந்த சோதனை முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது. இதே முறையில், மாதவியையும் உடல் பாகத்தையும் குக்கரில் வேகவைத்து, பொடியாக்கி, கால்வாயில் கரைத்துள்ளார். மீதமிருந்த எலும்புகளை மட்டும் ஏரியில் வீசியுள்ளார். ஆனால், குருமூர்த்தி சொன்னபடி, கால்வாயில் உடல்பாகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், வீட்டில் மனைவியை கொலை செய்த எந்த தடயமும் இல்லை.
இதனால் போலீசாருக்கு சந்தேகம் தீரவில்லை. மேலும் இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, “குருமூர்த்தி வீட்டில் ரத்தம் தெரியக்கூடாது என்பதற்காக கெமிக்கலை வாங்கிவந்து, வீட்டை முழுமையாக கழுவியுள்ளார். இதனால் தடயங்களை சேகரிப்பதில் சிக்கல் உள்ளது. அதனால், வேறு மாநில தடய அறிவியல் துறை அதிகாரிகள் வந்து குருமூர்த்தி வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்” என்றார். இந்நிலையில், பாத்ரூம் ஹீட்டரில் மாதவியின் தலைமுடி இருந்துள்ளது. இது குறித்து போலீசார் குருமூர்த்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது அவர் கூறும்போது, “மனைவியை வெட்டி துண்டுகளாக்கிய போது, ஒரு சில கடினமான உடல் பாகங்கள் இருந்துள்ளது. இதனால் அந்த பாகங்களை மட்டும் பக்கெட்டில் போட்டு, பிறகு ஹீட்டரில் தண்ணீரை சூடாக்கி அதில் ஊற்றி அந்த உடல் துண்டுகளை வேகவைத்துள்ளார். பின்னர் அந்த உடல் பாகங்களை, குக்கரில் வேகவைத்துள்ளார். பின்னர், எலும்பை உரலில் போட்டு இடித்து மீண்டும் வேக வைத்துள்ளார். மேலும், அனைத்தையும் சாக்குமூட்டையில் கட்டி எடுத்துச்சென்று ஏரியில் போட்டுள்ளார். இதனை கேட்ட போலீசாரே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Read more: “சார், எனக்கு மொத்தம் 5 புருஷன்” போலீசையே திணற வைத்த கல்யாண ராணி..