கொல்கத்தா மின் தில்ஜாலா பகுதியில் 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தக் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த அலோக் குமார் என்பவர் மந்திரவாதியின் ஆலோசனையின் பெயரில் அந்த சிறுமியை கடத்தி கொலை செய்ததாக காவல்துறையின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அலோக் குமாருக்கு குழந்தைகள் இல்லை. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் மந்திரவாதியை சந்தித்திருக்கிறார். அந்த மந்திரவாதி உனக்கு குழந்தை வேண்டுமானால் வருகிற நவராத்திரிக்குள் ஒரு குழந்தையை பலி கொடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கொல்கத்தா திரும்பிய இவர் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியை தனது குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் பின்னர் சாக்கு மூட்டையில் அடுக்குமாடி குடியிருப்புகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய காவல்துறையினர் சிறுமி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது தலையில் ஆழமான காயங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். சுத்தியல் கொண்டு தலையில் அடித்தது போல் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிறுமியின் பிறப்புறுப்பில் நகக்கீரல் இருப்பதாகவும் அவை கைகளை வைத்து அழுத்தும் போது ஏற்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இவரளித்த வாக்குமூலம் தொடர்பாக தீவிரமாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது . இவர் கூறிய தகவல்கள் உறுதியாகும் நிலையில் மந்திரவாதியும் கைது செய்யப்படுவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.