fbpx

செல்போனால் வந்த வினை….! கோபத்தில் மகனை கத்தியால் குத்திய தந்தை அதிரடி கைது……!

டெல்லியின் ஐ.பி. எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வருபவர் அசோக் சிங் (64) இவர் இன்ஜினியர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு மனைவியும் ஆதித்யாசிங்(23) என்ற மகனும் இருக்கின்றனர் இவரது மகன் ஆதித்யா குரு கிராம் பகுதியில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தந்தை அசோக் சிங் சமீபத்தில் குருகிராம் பகுதியில் புதிதாக பிளாட் ஒன்றை வாங்கி இருக்கிறார்.

இதற்கான தொகையை அசோக் சிங் மொபைல் ஆப் மூலமாக செலுத்த வேண்டும் இந்த நிலையில் நேற்று பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் தன்னுடைய மனைவியிடம் ஆப்பை பதிவிறக்கம் செய்து பணத்தை செலுத்தி விடு என்று தெரிவித்துள்ளார். ஆனால் அப்ளிகேஷன் டவுன்லோட் ஆகி பேமென்ட் செய்ய தாமதமாகி இருக்கிறது இது அசோக் சிங்கிற்க்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டும் நிலையில் அது மிகப்பெரிய சண்டையாக மாறி உள்ளது. தாய் தந்தைக்கு இடையே சண்டை ஏற்படுவதை தடுத்து சமாதானம் செய்யும் நோக்கத்தில் ஆதித்யா நடுவில் சென்றுள்ளார். அப்போது ஆதித்யா மற்றும் அசோக் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் அஷோக் வீட்டிலிருந்த கத்தியால் ஆதித்யாவை குத்திவிட்டார்.

இதில் படுகாயமடைந்த ஆதித்யா உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அதோடு இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் அவர் மீது இபிகோ 324 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ஆதித்யா ஆபத்தான நிலையில் தாண்டியராகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

நீட் தேர்வை அவங்க தான் கொண்டு வந்தாங்க….! எடப்பாடி பழனிச்சாமி விளாசல்……!

Sun Jun 18 , 2023
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு வேண்டாம் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆட்சிக்காலத்தில் தான் என்று தெரிவித்துள்ளார். அதேபோல அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது. கொள்கையின் அடிப்படையில் மட்டுமே கூட்டனை வைத்திருக்கிறோம் கொள்கையின் அடிப்படையில் தான் கூட்டணியே தவிர, அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது. திமுக தான் […]

You May Like