fbpx

ஒரு காலிஃப்ளவருக்காக பெத்த தாய்க்கு இந்த நிலைமையா.?தாயை போஸ்டில் கட்டி வைத்து உதைத்த மகன் .!

ஒடிசா மாநிலத்தில் தாய் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஊர் மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தத் தாயின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் கியாஜ்ஹர் மாவட்டத்தில் உள்ள சரசபசி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதா(70). இவருக்கு கருணா மற்றும் சஸ்த்ருகன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் இறந்து விட்ட நிலையில் சாரதா தனது மூத்த மகன் கருணாவுடன் வசித்து வந்திருக்கிறார். சமீபத்தில் கருணாவும் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் சாரதா தனியாக வசித்திருக்கிறார்.

அவரது இளைய மகன் சஸ்த்ருகன் அதே கிராமத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். சஸ்த்ருகன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் காலிஃப்ளவர் பயிரிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அவரது தாய் சாரதா தனது மகன் தோட்டத்தில் உள்ள காலிஃப்ளவரை பறித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சஸ்த்ருகன் தனது தாய் சாரதாவை சரமாரியாக தாக்கி உள்ளார்.

மேலும் இதனை தடுக்க வந்த தனது மனைவியையும் தாக்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்த அவர் அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சாரதாவை அவரது மகனிடம் இருந்து மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் சஸ்த்ருகன் கைது செய்யப்பட்டுள்ளார். மகன் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

பழைய வீட்டை விற்க போறீங்களா..? அப்படினா இந்த விஷயத்தை மறந்துறாதீங்க..!! அதிக விலைக்கு போகாது..!!

Mon Dec 25 , 2023
பழைய வீடுகளை விற்பனை செய்ய சரியான சந்தை நிலவரப்படி தொகை நிர்ணயிக்கப்பட்டாலும், அவற்றை எளிதாக விற்பனை செய்துவிட முடியாது என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பழைய வீட்டை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய வீட்டை வாங்கும் போது, அது தொடர்பான பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உங்களிடம் உள்ள பழைய வீட்டை விற்றுவிட்டு, புதிய வீட்டை […]

You May Like