ஒருவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றால் அவரிடமிருந்து விலகி செல்வதுதான் நியாயம். ஆனால் அப்படி விலகி செல்லவும் விருப்பம் இல்லாமல், சேர்ந்து வாழவும் விருப்பம் இல்லாமல் மனைவியை கொடுமைப்படுத்திய ஒரு கணவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அதாவது, சிங்கப்பூர் நாட்டில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழாமல் ஒரு நபர், அந்த பெண்ணை விவாகரத்து செய்யவும் மறுத்து விட்டார். அத்துடன் அந்த நாட்டின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவுகளையும் மீறும்படியாக அவர் நடந்து கொண்டதாக தெரிகிறது.
சீனாவைச் சேர்ந்த அந்த நபர் சிங்கப்பூரில் நிரந்தரமாக வசிக்கும் குடியுரிமை பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இரண்டு மகள்கள் ஒரு மகன் என்று மொத்தம் மூன்று குழந்தைகள் இருக்கின்றன. ஆனாலும் அந்தப் பெண்மணி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் சரியாக வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் தான், அந்த நபர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குடும்ப வன்முறையை வெளிப்படுத்தியதோடு, வேறு ஒரு பெண்ணையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் 47 வயதான அந்த நபருக்கு சுமார் 6 வார காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிரப்பித்திருக்கிறது.
இந்த வழக்கு விசாரணையின் போது முதலில் தன்னுடைய மனைவியை கொடுமைப்படுத்துவதை அந்த நபர் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பிறகு காவல்துறையினரின் விசாரணையில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. தானாக முன்வந்து காயப்படுத்தியது மற்றும் அந்த நாட்டின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவை மீறியது போன்ற மூன்று குற்றச்சாட்டுகளில் அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் தான், சிங்கப்பூர் நீதிமன்றம் அவருக்கு 6 வார காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது