fbpx

மர்மம் காக்கும் உலகின் முதன் சிவன் கோவில்..!! எங்க இருக்கு தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் செல்லும் வழியில் பழமையான சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயில் பாண்டிய நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான திருக்கோயில் ஆகும். ஆனால் இது எப்போது கட்டப்பட்டது என்பது இது வரை மர்மமாகவே உள்ளது.

இந்த கோயில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும், இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குவதாகவும் கூறுகிறார்கள். இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஏழு நிலை ராஜகோபுரங்கள் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்களைக் கொண்டது. பெரிய மரகத பாறையில் ஐந்தரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில் தரிசிக்கலாம்.

தாழம்பூ வைத்து எந்தவொரு சுவாமியையும் வழிபடுவது கிடையாது, ஆனால் இங்கு தாழம்பு வைத்து வழிபடப்படுகிறது. தாழம்பூ வைத்து வழிபடுவதால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்பது ஜதீகம். ராவணனின் மனைவி மண்டோதரி இங்கு சாமி தரிசனம் செய்து வேண்டியபிறகு தான் திருமண தடை நீங்கி ராவணனை மனம் முடிந்ததாகவும் மங்களநாதர் ஆலயத்தை ராமாயணத்திற்கு முற்பட்ட சிவாலயம் என்றும் கூறுகின்றனர். மறுபிறவி அளிக்கக் கூடிய இத்திருத்தலம், பாவம், புண்ணியம் பார்க்காமல் அனைவருக்கும் மறுபிறவி அளிப்பதாக மாணிக்கவாசகர் திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

6 அடி உயரத்தில் மரகதத்தால் செய்யப்பட்ட நடராஜர் மரகததிருமேனி சந்தனக்காப்பில் காட்சி அளிக்கிறார். ‘தென்கைலாயம் (தென் கயிலாயம்)’, ‘ஆதிகாலத்து சிவாலயம் ’ மற்றும் உலகின் முதல் சிவாலயம் இதுவென கூறுகின்றனர். இங்கு தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் செய்யப்பட்டது. ஆனால் இது எப்போது கட்டப்பட்டது என்பது இது வரை மர்மமாகவே உள்ளது.

Read more ; அரசு துறைகளின் SBI மற்றும் PNB வங்கி கணக்குகளை மூட கர்நாடகா அரசு உத்தரவு..!!

English Summary

Mangalanatha Swamy Temple located at Uthrakosamangai in Ramanathapuram, Tamil Nadu is known as the world’s first Shiva temple.

Next Post

இஸ்ரேல்-ஹமாஸ் போர்!. காஸாவில் 16,000க்கும் அதிகமான குழந்தைகள் பலி!. 40,000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

Fri Aug 16 , 2024
Israel-Hamas War!. More than 16000 children died in Gaza! Death toll exceeds 40000!

You May Like