fbpx

‘பணத்துக்காக அந்த மாதிரி வீடியோ போட்ட மணிமேகலை’..!! ’எல்லாமே டிஆர்பி-க்காக தான்’..!! சரத் சொன்ன பகீர் தகவல்..!!

கடந்த ஒருவாரமாகவே, சோசியல் மீடியாவில் மணிமேகலை – பிரியங்கா பிரச்சனை தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு வரும் நிலையில், பலர் பிரியங்காவுக்கும் ஆதரவாக பேசி வருகின்றனர். இப்படியான நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சரத்திடம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே இருக்கும் பிரச்சனையை பற்றி என்ன நினைக்கிறீங்க? அங்கு என்ன நடந்தது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்குமே என்று கேட்க.. அதற்கு சரத், நான் இப்போ எதையும் சொல்ல விரும்பல. இது நாட்டுக்கு பெரிய முக்கியமான விஷயமே கிடையாது.

அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டது அவங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை. ஆனால், அவங்க வீடியோ வெளியிட்டு நல்லா காசு சம்பாதிச்சுட்டாங்க. அதை பார்த்துட்டு இருக்க நீங்களும் நானும் தான் ஏமாளி. அவர்களால் பல பேர் வீடியோ வெளியிட்டு காசு சம்பாதிச்சிட்டு இருக்காங்க. இதை பற்றி நாம் ஏதாவது கருத்து சொன்னா நம்மள சொம்பு என்று சொல்லுவாங்க. ஒருவேளை அவங்களோட தனிப்பட்ட டிஆர்பி அதிகரிப்பதற்காக கூட இப்படி வீடியோ வெளியிட்டிருப்பாங்க.

அதாவது, நம்மை மக்கள் மறந்து விட்டார்கள். அவர்களுக்கு நான் இருப்பதை நினைவுபடுத்த வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் பேசி மணிமேகலை வீடியோ வெளியிட்டிருக்கலாம் என்று அவரின் பெயரை சொல்லாமல் சரத் கூறியிருந்தார். இதற்கு ரசிகர்கள் சரத் விஜய் டிவி வாய்ப்புக்காக மணிமேகலையை தாழ்த்தி இப்படி பேசுகிறார் என்று அவரை திட்டி கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், பிரியங்காவின் ரசிகர்கள் சரத் சொல்வது தான் சரி என்று அவருக்கு நன்றி சொல்லியும் வருகின்றனர்.

Read More : ’எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது’..!! ’வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்’..!! எடப்பாடி பழனிசாமி பளீச்..!!

English Summary

Both of them fought because of their personal problems. But, they earn good money by publishing their videos. You and I are fools to watch it.

Chella

Next Post

யூடியூப் மூலம் பயில்வான் ரங்கநாதன் எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா..? சினிமாவை விட இதுல தான் அதிகமாம்..!!

Mon Sep 23 , 2024
Bailwan has openly spoken that YouTube earns more than cinema and how much he earns per day.

You May Like