fbpx

இதெல்லாம் ஒரு பொழப்பா..!! பணம் வாங்கிட்டு எனக்கு எதிரா பேசுற.. சொம்பு அடிக்கிறியா? – அந்தர் பல்டி அடித்த குரேஷியை வைச்சு செய்த மணிமேகலை..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் மணிமேகலை விலகியதுதான் ஒரு வாரமாக பேசப்பட்டது. நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதற்கான காரணத்தை வீடியோவாக பதிவிட்டதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால் விஜய் டிவி பிரபலங்கள் சிலர் பிரியங்காவிற்க்கு ஆதரவாக வீடியோ பதிவிட்டனர்.

இந்த நிலையில் மணிமேகலை நேற்று மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னோடு இருந்தவர்கள் தனக்கு எதிராக வீடியோ வெளியிட்டதை குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில், “பல வருஷமா என் கூடவே இருந்தவர், கூட இன்று எனக்கு எதிரா வீடியோ போட்டுட்டு இருக்காங்க, அதிலும் வாட்ஸப்பில் நம்மிடம் நீ தான் சரி என்று பேசுறாங்க.. நமக்கு வாழ்த்துகளும் சொல்லுறாங்க. ஆனா வீடியோவில் எல்லா தப்பும் நாம தான் செஞ்சோம் என்று பேசுறாங்க. இவங்களா இப்படி என்று அதிர்ச்சியாகும் அளவிற்கு மாறிட்டாங்க.

கூட இருக்கறவங்களை நம்ப கூடாதுன்னு சொல்லுவாங்க அது இப்போ நிரூபணம் ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் பணம்தான் காரணம், பணம் என்றால் எப்படி வேணாலும் பேசலாம் என்று சிலர் நிரூபிக்கிறாங்க என்று குரோஷியை தாக்கி மணிமேகலை அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

மணிமேகலை தான் விலகி விட்டேன் என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தபோது அதில் நீ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் என்று ஒரு கமெண்ட் போட்ட குரேஷி இரண்டு நாட்கள் கழித்து டெலிட் செய்து விட்டார். பின்பு இருதினங்களுக்கு பிறகு மணிமேகலைக்கு எதிராக வீடியோ பதிவிட்டிருந்தார். இந்த நிலையில தான் மணிமேகலை கூடவே இருந்துட்டு இப்போ சொம்பு அடிக்கிறியா என்று அந்த வீடியோவில் குரோஸி பெயரை குறிப்பிடாமல் கேட்டிருக்கிறார்.

Read more ; வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது நல்லதா? இத கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!!

English Summary

Manimekala posted a video attacking Kuroshi saying that some people prove that if they want money they can talk any way they want.

Next Post

அண்ணன்-தங்கை திருமணம்.. மறுப்பு தெரிவித்தால் கடுமையான தண்டனை..!! - இந்தியாவில் விநோத பழக்கம் கொண்ட பழங்குடியினர்

Sun Sep 22 , 2024
In this State, Brothers Impregnate Sisters: A Shocking Punishment for Refusal!

You May Like