கடந்த மே மாதம் 4ம் தேதி முதல், மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினர் இடையே மிகப் பெரிய மோதல் வெடித்து, அது கலவரமாக மாறி இருக்கிறது. அந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல், மாநில அரசும், காவல் துறையும் திண்டாடி வருகின்றனர்.
அதோடு, அந்த மாநிலத்தில், குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கலவரக்காரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மணிப்பூர் மாநில டிஜிபி உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், மணிப்பூர் மாநில டிஜிபி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்க்கு முன்னதாக, மணிப்பூர் மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு செயல் இழந்துவிட்டதாக கடுமையாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.