மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற மைதேயி சமூகத்தினருக்கும் சிறுபான்மை இனமான குக்கி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே நிலவி வரும் மோதல் காரணமாக, அந்த மாநிலத்தில் 2️ மாதங்களுக்கு மேலாக பதட்டமான சூழ்நிலை நீடித்து வருகிறது. இதனால் பலர் முகாம்க்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ள எதிர்க்கட்சி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை இன்று சந்தித்துள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற மக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சந்தித்த நிலையில் இன்று ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கி இருக்கின்றனர்.
அப்போது மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மிக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்காகவே அந்த மாநிலத்தில் கடந்த மே மாதம் 4ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட தாயாரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்து இருக்கிறது. வன்முறையால் ஏற்படுத்த பாதிப்புகளை ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகள் 2️ நாள் பயணமாக மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளது. இந்த குழுவில் காங்கிரஸ் திமுக திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.