fbpx

உலக நாயகனின் ‘Thug Life’ படப்பிடிப்பு ஆரம்பம்: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணையும் ‘Thug Life’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று தொடங்கியதாக படப்பிடிப்பு குழுவினர் அறிவித்துள்ளனர். நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் திரைப்படம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்து வருகிறது.

கமல்ஹாசன் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் திரிஷா கௌதம் கார்த்திக் துல்கர் சல்மான் ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது .

18 வருடங்களுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் மணிரத்தினத்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 37 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று துவங்கியதாக குழுவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்றை ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள படக்குழு, இந்தத் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமானது என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

Next Post

ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு விழா: "வரலாற்றில் இடம் பெற்று விட்டேன்.." முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

Wed Jan 24 , 2024
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெயர் பெற்றது. இங்கு நவீன வசதிகளுடன் கூடிய ஜல்லிக்கட்டு விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த வாக்குறுதியின் அடிப்படையில் அலங்காநல்லூரில் உள்ள கீழக்கரையில் 66 ஏக்கர் நிலப்பரப்பில் 44 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அரங்கம் அமைக்கப்பட்டது. பல நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான நுழைவு வாயில் வாடிவாசல் மாடுகள் […]

You May Like