குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட “மஞ்சுமெல் பாய்ஸ்” திரைப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் வரிசையாக ஏகப்பட்ட படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களின் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், சத்தமே இல்லாமல் நல்ல படங்களை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கி வெளியிட்டு வருகிறது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் ஓடிடி உரிமை விற்பனையாகவில்லை என கலாய்க்கப்பட்டு வந்த நிலையில், அதன் ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியுள்ளது. இந்நிலையில், “மஞ்சுமெல் பாய்ஸ்” திரைப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Earthquake | திருவாரூர் மாவட்டத்தில் நிலநடுக்கம்..? அலறியடித்து ஓடிய மக்கள்..!! நடந்தது என்ன..?