fbpx

காதலர்களே உஷார்!!! காதலிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த காதலனுக்கு நேர்ந்த சோகம்..

காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக்கொள்ளும் மௌனமொழியே முத்தம். இது, உணர்ச்சிகளின் பெரிய குரல். முதல் காதல் எவ்வளவு ஸ்பெஷலோ, அதுபோல் தான் முதல் முத்தமும். காதலை வெளிப்படுத்துவதில் முத்தத்துக்கு ஈடு வேறு எதுவுமில்லை. தங்களின் துணையின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த வாங்கிக்கொடுக்கும் விலை மிகுந்த பரிசுப் பொருள்களைவிட, ஒரு முத்தம் உணர்த்திவிடும் உங்கள் எல்லையற்ற காதலை! ஆனால் இங்கு ஒருவருக்கு அந்த முத்தமே பிரச்சனையாக மாறியுள்ளது.

ஆம், சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மேற்கு ஏரியில் காதல் ஜோடி ஒன்று டேட்டிங் சென்றுள்ளனர். அப்போது அங்கு இருவரும் சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் ‘லிப் லாக்’ முத்தம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், திடீரென காதலனின் காதில் ஊசி குத்துவது போல் வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் நேரம் செல்லச்செல்ல காதலனின் அவரின் கேட்கும் திறன் குறைந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு காதலனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியைப் பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதுதான் இதனால் தான் அவருக்கு காது வலி ஏற்பட்டதாக கூறியுள்ளனர். மேலும், ”உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Maha

Next Post

பகீர்...! ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை கொள்ளையடிக்கும் மத்திய அரசு...! முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு...!

Mon Sep 25 , 2023
1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை கொள்ளையடிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூரில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை நாம் வழங்கினால், ‘MINIMUM BALANCE’ இல்லை எனச் சொல்லி, கொள்ளையடிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் […]

You May Like