fbpx

புதிய முதலீடுகள் மூலம் 24,700 பேருக்கு வேலை வாய்ப்பு..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

ரூ.44,125 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் 15 ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் 24,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. துறை ரீதியான அமைச்சர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.  இன்று காலை தொடங்கிய அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் தமழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் பணிகளை வேகப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “44,125 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் வந்துள்ளன. புதிய முதலீடுகள் மூலம் 24,700 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும். பசுமை எரிசக்தி துறையில் 3 முக்கிய கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என்றார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதால், அவரது வெளிநாட்டு பயணத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்படும் ஸ்டாலின், செப்டம்பர் 14ஆம் தேதிதான், தமிழகம் திரும்புகிறார்.

Read more ; உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை திட்டமிடும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க..!!

English Summary

Many important decisions were taken in the Cabinet meeting held today under the chairmanship of Tamil Nadu Chief Minister Stalin.

Next Post

ஊக்கமருந்து..!! இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு தடை..!!

Tue Aug 13 , 2024
Indian badminton player Pramod Bhagat has been banned from participating in the Paralympics.

You May Like