ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மென்பொருளாகும்.. சமீப காலமாக இந்த ChatGPT உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.. நாம் கூகுளில் ஒரு விஷயத்தை பற்றி தேடினால், அதை பற்றி பல்வேறு ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும்.. ஆனால் இந்த ChatGPT மூலம் தேடினால், நாம் என்ன தேடுகிறோமோ அதை பற்றிய விவரங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து, நமக்கு தேவையான சரியான விவரத்தை மட்டுமே வழங்கும்.. மேலும் ChatGPT-யின் சுவாரஸ்யமான பதில்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.. கவிதை, கட்டுரை தொடங்கி ChatGPT செயலி, MBA தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது. இதனால் குறுகிய காலத்திலேயே அதிகமானோர் இந்த ChatGPT செயலியை பயன்படுத்த தொடங்கி விட்டனர்..
1000-சொல் கட்டுரையாக இருந்தாலும், கணிதப் பிரச்சனையாக இருந்தாலும், கவர் லெட்டராக இருந்தாலும் சரி, குறியீடாக இருந்தாலும் சரி, ChatGPT ஆனது அனைத்திற்கும் பதில்களை அளித்து வருகிறது.. எனினும் இந்த ChatGPT செயலி மனிதர்கள் செய்யும் வேலையை செய்ய முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது..
இந்நிலையில் 1,000 நிறுவன தலைவர்களிடம் Resumebuilder.com நடத்திய சமீபத்திய கணக்கெடுப்பில், சுமார் 50% அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வணிகத்தில் ChatGPT ஐ நடைமுறைப்படுத்தியதால், பலர் வேலை இழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தொழில்துறைகளில் உள்ள ஊழியர்கள் ChatGPT காரணமாக தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று அஞ்சுகின்றனர்.
இதனிடையே Open AI நிறுவனம், ChatGPT- GPT 4 இன் மேம்பட்ட பதிப்பையும் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இந்த ChatGPT சாட்போட் மனிதர்களுக்கு மாற்றாக முடியாது என்றும், மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..
இந்த சூழலில் பிரசாந்த் ரங்கசாமி என்ற ட்விட்டர் பயனர், ChatGPT-4 மாற்றக்கூடிய மனித வேலைகளை பற்றி கேட்டுள்ளார்.. அதற்கு பதிலளித்த GPT-4, மனிதர்கள் செய்யும் 20 வேலைகளின் பட்டியலை வெளியிட்டது.. இந்த வேலைகளை மனிதர்களை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என்பதை GPT-4 வெளிப்படுத்தியது.
GPT-4 மாற்றக்கூடிய 20 வேலைகள்
- டேட்டா என்ட்ரி கிளர்க் (Data Entry Clerk)
- வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி *Customer Service Representative)
- சரிபார்ப்பவர் (Proofreader)
- சட்ட துணை (Paralegal)
- புத்தகக் காப்பாளர் (Bookkeeper)
- மொழிபெயர்ப்பாளர் (Translator)
- நகல் எழுதுபவர் (Copywriter)
- சந்தை ஆராய்ச்சி ஆய்வாளர் (Market Research Analyst)
- சமூக ஊடக மேலாளர் (Social Media Manager)
- நியமனம் திட்டமிடுபவர் (Appointment Scheduler)
- டெலிமார்கெட்டர் (Telemarketer)
- மெய்நிகர் உதவியாளர் (Virtual Assistant)
- டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட் (Transcriptionist)
- செய்தி நிருபர் (News Reporter)
- பயண முகவர் (Travel Agent)
- ஆசிரியர் (Tutor)
- தொழில்நுட்ப ஆதரவு ஆய்வாளர் (Technical Support Analyst)
- மின்னஞ்சல் சந்தைப்படுத்துபவர் (Email Marketer)
- உள்ளடக்க மதிப்பீட்டாளர் (Content Moderator)
- பணியமர்த்துபவர் (Recruiter)
மேலும், GPT-4 இந்த வேலைகளில் மாற்றக்கூடிய மனித பண்புகளையும் கூட வெளிப்படுத்தியுள்ளது. இந்த குணாதிசயங்களில் வேகம் மற்றும் துல்லியம், தகவல் தொடர்பு மற்றும், விவரங்களுக்கு கவனம் செலுத்துதல், ஆராய்ச்சி மற்றும் அமைப்பு, கணித திறன்கள், மொழி புலமை, படைப்பாற்றல் மற்றும் எழுதுதல், பகுப்பாய்வு திறன், உள்ளடக்க உருவாக்கம் மற்றும் க்யூரேஷன், நேர மேலாண்மை, வற்புறுத்தல் மற்றும் தொடர்பு, கேட்டல் மற்றும் தட்டச்சு திறன், உண்மை சரிபார்ப்பு மற்றும் எழுதுதல், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு, அறிவு மற்றும் கற்பித்தல், சரிசெய்தல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது, எழுதுதல் மற்றும் இலக்கு, விமர்சன சிந்தனை மற்றும் தீர்ப்பு, நேர்காணல் மற்றும் மதிப்பீடு ஆகியவை உள்ளது..