fbpx

“ சுதந்திரம் அடைந்த போது பலருக்கு இந்தியா மீது சந்தேகம் இருந்தது.. ஆனால்…” பிரதமர் மோடி உரை..

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இந்திய விடுதலை போராடத்தின் வரலாறு மிக நீண்டது.. நாடு இரண்டாக பிரிக்கப்பட்ட போது மக்கள் கடும் இன்னலை சந்தித்தனர்.. ஆங்கிலேயர் ஆட்சியை முடிவுக்கு கொண்ட விடுதலை போராட்ட வீரர்களுக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது.. மகாத்மா காந்தி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாபாசாகேப் அம்பேத்கர், வீர் சாவர்க்கர் போன்றோருக்கு கடமைப் பாதையில் தங்கள் இன்னுயிரை ஈட்டிய குடிமக்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள்.

மங்கள் பாண்டே, தாத்யா தோபே, பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஷ்பகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் அடித்தளத்தை அசைத்த நமது எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு இந்த தேசம் நன்றி கூறுகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை பலருக்கு சுமையாக இருந்தது. ஆனால் இந்த பன்முகத்தன்மைதான் இந்தியா முன்னேற உதவியது.. கடந்த 75 ஆண்டுகளில் நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பங்களித்த நாட்டின் அனைத்து குடிமக்களையும் நினைவுகூரும் நாள் இன்று.

ராணி லக்ஷ்மிபாய், ஜல்காரி பாய், சென்னம்மா, பேகம் ஹஸ்ரத் மஹால் என இந்தியப் பெண்களின் வலிமையை நினைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறார். இந்தியா ஜனநாயகத்தின் தாய். இந்தியா தனது 75 ஆண்டு கால பயணத்தில் பல சவால்களை எதிர்கொண்டதுடன், விலைமதிப்பற்ற திறன் கொண்டது என்பதை நிரூபித்துள்ளது.. சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இப்போது சிறந்த இந்தியாவைக் கனவு காணலாம். ஒவ்வொரு இந்தியரும் இப்போது மாற்றத்தைக் காண விரும்புகிறார்கள். ஒவ்வொரு குடிமகனும் இப்போதே ஒரு சிறந்த இந்தியாவை விரும்புகின்றனர். முந்தைய தலைமுறையினர் மாற்றத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இனி அப்படி இல்லை.

சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது பழங்குடியின சமூகத்தை மறக்க முடியாது. பகவான் பிர்சா முண்டா, சித்து-கன்ஹு, அல்லூரி சீதாராம ராஜு, கோவிந்த் குரு உள்ளிட்டோர் சுதந்திரப் போராட்டத்தின் குரலாக மாறி, பழங்குடி சமூகத்தை தாய் நாட்டிற்காக செய் அல்லது செத்து மடி என்ற எண்ணத்தை தூண்டினர்..

சுதந்திரத்திற்குப் பிறகு செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முதல் நபர் நான்தான்.. நாம் சுதந்திரம் அடைந்தபோது பலருக்கும் நமது வளர்ச்சிப் பாதையில் பல சந்தேகங்கள் இருந்தன. ஆனால், இந்நாட்டு மக்களிடம் வித்தியாசமான ஒன்று இருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்த மண் சிறப்பு வாய்ந்த மண் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

வங்கி வேலை தேடும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு...! உடனே விண்ணப்பிக்கவும்..!

Mon Aug 15 , 2022
South Indian Bank Limited வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager and Dealer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 35 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் CA, CFA அல்லது MBA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like