fbpx

பெண்கள் பிரா அணிவது அவசியமா? மருத்துவர்கள் சொல்வது என்ன? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பெண்களிடம் உள்ளாடை தொடர்பான விழிப்புணர்வு குறைவுதான். எல்லோரும் அணிகிறார்களே நாமும் அணியலாம் என்று தான் பலர் எண்ணுகின்றனர். அந்த உள்ளாடைகள் நமக்கு உண்மையாகவே தேவைப்படுகிறதா என்பதனை அவர்கள் ஆராய்வதில்லை. குறிப்பாக பெண்கள் அணியும் உள்ளாடையான பிரா பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு கட்டாயம் தேவை.

ஏனெனில் அதுதான் அவர்களுடைய உடலோடு இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும் ஒரு ஆடை. உள்ளாடை என்பது வழக்கமாக நாம் அணியும் ஆடையைப் போன்று இல்லை. அது நம் இனப்பெருக்க உறுப்புக்களின் பாதுகாப்பு கவசங்கள் என்றுதான் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். சிலர் தோற்றத்தை அழகாக கட்டுடல் மேனியாக காட்டி கொள்ள ப்ரா அணிகிறார்கள். உண்மையில், உள்ளாடை அணிவதால் ஆரோக்கியம் எந்த விதத்திலும் மேம்படாது என்றும் பிரா அணிவதால் பெண்களுக்கு நிறைய ஆரோக்கிய கேடுகள் ஏற்படும் என்றே பல ஆய்வு முடிவுகளிலும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், பெண்கள் உள்ளாடைகள் அணிவதை நிறுத்தினால் மார்பகத்தை சுற்றி உண்டாகும் அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அவர்களுடைய மென்மையான சருமத்தை கொண்ட மார்பகங்களில் ஏற்படும் தடங்களும், வலியும் மறைகிறது. ரொம்பவும் ரிலாக்ஸாக இருக்கலாம். மார்பகங்கள் இயற்கையான வளர்ச்சியை அடையும். ப்ரா அணியாமல் விட்டால், மார்பகத்திற்கு ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். சிலர் ப்ரா இறுக்கமாக அணிந்து கொள்வார்கள். இதனால் மென்மையான தோலில் ரொம்ப அழுத்தம் வந்து காயங்கள் கூட உண்டாகும். அதனால் அவ்வப்போது ப்ரா அணியாமல் பெண்கள் இருப்பது நல்லது என்கின்றனர்.

மேலும், பெண்கள் ப்ரா போன்ற இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்த்தால் மார்பு பகுதியில் ஏற்றம் வலி நீங்க செய்கிறது. சில வகைவகை ப்ரா விலா எலும்பு, முதுகு தசை, கழுத்தில் அழுத்தம் உண்டாக்கும். இதனால் வீக்கம், காயம் ஏற்படுத்தலாம். இரவு தூங்கும் போது ப்ரா அணிய வேண்டிய அவசியம் இருக்காது. ப்ரா அணிவதை தவிர்க்கலாம். நல்ல தூக்கம் வரும். சுதந்திரமான தூக்கத்திற்கு இறுக்கமான உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

Read more ; ’திருமணத்திற்கு பிறகு இப்படி வந்து சொன்னால் என்ன சொல்றது’..? ’செட் ஆகாது’..!! இருவரும் பிரிய இதுதான் காரணம்..!!

English Summary

Many studies have shown that wearing a bra can cause many health problems for women.

Next Post

இவ்வளவு அழகான கிராமத்தில் இப்படி ஒரு விசித்திரமா..? அப்படி என்ன இருக்கு தெரியுமா..?

Mon Aug 12 , 2024
Not wanting to stay in the scenic village, the people are fleeing to other areas. Is it due to ghosts and devils? Let's see in detail.

You May Like