fbpx

“அடேங்கப்பா.. 19,400 கோடியா.? பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய மார்க் ஜுக்கர்பெர்க்..”! சொத்து மதிப்பில் 4 வது இடத்தில் மெட்டா நிறுவனம்.!

அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் குழுமமான மெட்டா, தனது ஒரு நாள் பங்குச் சந்தையின் லாபமாக $164 பில்லியனை எட்டியது. வால் ஸ்ட்ரீட் வரலாற்றிலேயே இந்தத் தொகையை எட்டிய முதல் நிறுவனம் இதுவே ஆகும். இதனால் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்கின், நிகர சொத்து மதிப்பு $165 பில்லியனை எட்டியுள்ளது. இது பில்கேட்ஸின் சொத்து மதிப்பை விட அதிகமாகும்.

கடந்த வியாழக்கிழமை, முகநூல் நிறுவனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, மெட்டா தனது காலாண்டு ஈவுத்தொகை ஷேர் ஒன்றுக்கு 50 செண்ட் என அறிவித்தது. மேலும் கூடுதலாக $50 பில்லியன் பங்குகளை மீண்டும் வாங்குவதற்கு அங்கீகாரமும் அளித்தது.

அடுத்த நாள் பங்குச்சந்தையின் மதிப்பில் $196 பில்லியனைத் தொட்டது. இதனால் மெட்டாவின் பங்குச்சந்தை வளர்ச்சி 20.3 சதவிகிதமாக உயர்ந்தது. மேலும் 2012ல் வால் ஸ்ட்ரீட் தொடங்கிய பின், தனது மூன்றாவது பெரிய அதிகரிப்பை பதிவு செய்தது. மெட்டா நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு தற்போது $1.22 டிரில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

மெட்டா நிறுவனத்தின், சமீபத்திய பங்குச்சந்தை அதிகரிப்பு, அமேசான் நிறுவனம் வைத்திருந்த முந்தைய சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மார்க் ஜூக்கர்பெர்க் $165 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டு, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்சை விட செல்வந்தர் ஆகிறார். அதுமட்டுமின்றி, CNBC அறிக்கையின்படி, வருகிற மார்ச் மாதத்தில் ஜுக்கர்பெர்க் தனது முதல் ஈவுத்தொகையை செலுத்தும் போது $174 மில்லியன் பணத்தைப் பெறுவார்.

Next Post

திருச்சி: வீடு புகுந்து பிரபல ரவுடி வெட்டிக்கொலை..!! குழந்தைகள் கதறல்.! கண்முன்னே நடந்த கொடூரம்.!

Sun Feb 4 , 2024
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி, வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதிகளில் ரவுடியாக அறியப்பட்டவர் பரணிதரன். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பரணிதரன் சமயபுரம் பகுதியில் உள்ள நந்தா நகரில் தனது மனைவி பிரதீபா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை அவரது மனைவி பிரதீபா வேலைக்கு சென்ற பிறகு […]

You May Like