சரியாக மதிப்பு நிர்ணயம் செய்யாததால் அரசுக்கு கிடைக்கப் பெறும் வருவாய் தடுக்கப்படுகிறது. இதனை தடுக்க கீழ்கண்ட நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆவணத்தில் சொத்து மனையாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டிலும் மனைமதிப்பு இருக்கும் நிலையில் மாவட்டவருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் இடப்பார்வையிட்டு மதிப்பு நிர்ணயம்செய்யும் போது நிர்ணயம் செய்யும் மதிப்பு பதிவு அலுவலர் பரிந்துரைத்த வழிகாட்டி மதிப்பில் 80% கீழ் இருக்கும் பட்சத்தில் படிவம் 2 அனுப்புவதற்கு முன்பு நிர்ணயம்செய்யப்படும் மதிப்பு விவரத்தினை சம்மந்தப்பட்ட துணைப்பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி உரிய முன்அனுமதி பெற வேண்டும்.
ஆவணத்தில் சொத்து விவசாய நிலமாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டிலும் விவசாய நில மதிப்பு இருக்கும் நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் இடப்பார்வையிட்டு மதிப்பு நிர்ணயம் செய்யும் போது நிர்ணயம் செய்யும் மதிப்பு பதிவு அலுவலர் பரிந்துரைத்த வழிகாட்டி மதிப்பில் 80% கீழ் இருக்கும் பட்சத்தில் படிவம் 2 அனுப்புவதற்கு முன்பு நிர்ணயம் செய்யப்படும் மதிப்பு விவரத்தனை சம்மந்தப்பட்ட துணைப்பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி உரிய முன் அனுமதி பெற வேண்டும்.