fbpx

திருமண தடையா?… தீபாவளிக்கு முந்தய நாளான இன்று யம தீபத்தை ஏற்றி வழிபடுங்கள்!

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம். மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று திதி கொடுத்து வணங்கி வருகிறோம். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.

அதாவது, தீபாவளிக்கு முதல் நாளான இன்று யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும். யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.

யம தீபம் ஏற்றும் முறை: உங்கள் வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். விளக்கேற்றிய பின்னர் உங்கள் முன்னோரை மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும். பின்னர் இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

Kokila

Next Post

தீபாவளிக்கு முன்னதாகவே அதிகரித்த காற்று மாசு..!! திணறும் சென்னை..!! பாதிப்பு உறுதி..!!

Sat Nov 11 , 2023
தீபாவளியை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருவதால், சென்னையில் காற்றுமாசு அதிகரித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 10 முதல் 20 வரை பதிவாகி உள்ளது. பெருங்குடியில் 169, அரும்பாக்கம் 134, கொடுங்கையூர் 12, மணலி 109, ராயபுரம் 121, கும்மிடிப்பூண்டி 230, வேலூரில் 123, கடலூரில் 112 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. காற்று மாசு காரணமாக சுவாச பாதிப்பு போன்ற பிரச்சனைகள் […]

You May Like