fbpx

ரூ.70,000 கொடுத்து திருமணம்..!! அடிக்கடி வெளியில் தங்கிய மனைவி..!! காட்டுப்பகுதியில் வைத்து கழுத்தை அறுத்துப் போட்ட கணவன்..!!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், அவரை கொலை செய்து உடலை காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநிலம் ஃபதேபூர் பெரி பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, அந்த பெண்ணின் உடல் கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆட்டோ ஒன்று சென்று திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆட்டோ எண்ணை வைத்து அதன் ஓட்டுநர் அருணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கொலை செய்யப்பட்ட பெண் தரம்வீரர் என்பவரது மனைவி ஸ்வீட்டி என்பது தெரியவந்தது.

ஆதரவற்ற பெண்ணான ஸ்வீட்டியை 70,000 ரூபாய் பணம் கொடுத்து தரம்வீர் திருமணம் செய்து மனைவியாக்கியுள்ளார். ஆனால், அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி ஸ்வீட்டி வெளியில் தங்கி வந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் தரம்வீர் அவரை கொலை செய்ய திட்டமிட்டு அதன்படி, ஹரியானா எல்லையில் கழுத்தை நெரித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் வீசியுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தரம்வீர், சத்யவான், அருண் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Chella

Next Post

Jailer | ஜெயிலரை கலாய்த்த விஜய் ரசிகர்..!! ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கிய ரஜினி ரசிகர்கள்..!!

Thu Aug 10 , 2023
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது ஜெயிலர் திரைப்படம். மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்தில் வாங்கிய அடியை ஜெயிலர் மூலம் திருப்பி கொடுக்க வேண்டுமென நெல்சனும், 2 படங்களில் சறுக்கியதை இதன் மூலம் சரி செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில் ரஜினிகாந்தும் பணியாற்றியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் படம் வெளியாகியுள்ளதால், அவரது […]

You May Like