fbpx

ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம்..! 200 சவரன் நகையை அபேஸ் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற கிளையில், இர்பானா ரஸ்வீன் என்ற பெண் தனது கணவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் சில பிரிவுகளை சேர்க்கக்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், “மனுதாரரின் கணவர் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்து 200 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக பெற்றுள்ளார்.

ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம்..! 200 சவரன் நகையை அபேஸ் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்த விவகாரம் திருமணத்திற்கு பின்பு தெரியவந்த நிலையில், கணவர் தலாக் முறையில் விவாகரத்து சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். இதுதொடர்பாக மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அலுவலகத்தில் முதற்கட்ட விசாரணை நடைபெற்று, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் கணவர் மீது தவறு இருக்கும் சூழலில், அதை மறைத்து திருமணம் செய்துள்ளார். ஆகவே, மனுதாரரின் கணவர் மீது 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Chella

Next Post

பேருந்து நிலையத்தில் தலைமுடியை பிடித்து இழுத்து.. குடுமிபுடி சண்டை போட்ட பள்ளி மாணவிகள்..!

Wed Jul 27 , 2022
நெல்லை, பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவிகள் தலை முடியை பிடித்து சண்டை போட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகரின் முக்கிய பேருந்து நிலையமாக பாளை பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பஸ் நிலையம் வழியாக தினமும் ஏராளமான பேருந்துகள் சென்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் அவர்களது கிராமங்களுக்கு திரும்புவார்கள். […]

You May Like