காதலித்த பெண்ணை காலையில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட இளைஞர் மாலையில் மரணமடைந்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோமரி (30). கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றார். இவர் சென்னை தாம்பரம் காந்தி நகரைச் சேர்ந்த காளிதாஸ் மகன் சுரேஷ் குமார் (30) இருவரும் பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் பிடெக் படித்துள்ளனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
பொறியாளரான சுரேஷ் சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, புதுவை காலாப்பட்டில் உள்ள பாலமுருகன் கோயிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக சுரேஷ்குமார் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோட்டக்குப்பம் வந்து தனியார் விடுதி அறையில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று காலை காலாப்பட்டு பாலமுருகன் கோயிலில் கோமதிக்கும் சுரேஷ்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது.
நேற்று மாலை கோட்டக்குப்பம் தனியார் மண்டபலத்தி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உறவினர்கள் கூடியிருந்த அரங்கத்தில் புதுமணத்தம்பதியாக சுரேஷ்- கோமதி நின்றிருந்தனர். இந்நிலையில் திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். எவ்வளவு எழுப்பியும் எழுந்திரிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியான உறவினர்கள் கதறி அழுதனர். அவரை உடனடியாக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சுரேஷ்குமாரின் தந்தை காளிதாஸ் கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளர். மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றது. புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.