கோவை மாவட்டம் பீளமேடு கருப்பராயன்பாளையத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி (19) என்ற மகள் இருந்தார். இவர் தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், அபிராமி ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில், இதுகுறித்து அறிந்த பெற்றோர் அபிராமிக்கு அறிவுரை கூறி கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால், அபிராமி உடனடியாக திருமணம் செய்து வைக்கும்படி தனது பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார்.
ஆனால், படிப்பு முடியும் வரை திருமணம் செய்து வைக்க முடியாது என பெற்றோர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த அபிராமி, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.