ஒரு மனிதனின் வாழ்கையில் முக்கியமான காலகட்டம் என்றால் அது திருமணம் தான். ஒருவர் வாழ்கையின் தரத்தை மட்டும் இல்லாமல் மன நிம்மதியை நிர்ணயிப்பதும் திருமணம் தான். ஆம், ஒருவருக்கு வாழ்க்கை துணை சரியாக அமையவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கையே நரகமாகிவிடும். அதனால், இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருமணத்தை நாம் பார்த்து தான் செய்ய வேண்டும்.
அந்த வகையில், தம்பதியர் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க பல விஷயங்கள் ஜாதகத்தில் பார்க்கப்படுகின்றன. திருமணத்தில், ஜாதகத்துடன் ராசியும் பொருந்தினால், வாழ்க்கையில் சிரமங்கள் இல்லை. அந்த வகையில், குறிப்பிட்ட ராசி பெண்களை திருமணம் செய்தால் அவர்கள் நல்ல மனைவியாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
மேஷம்
முதல் ராசியான மேஷ ராசி பெண்கள், தங்களின் வேலையில் திறமையாக இருப்பார்கள். மேலும், எந்தச் சூழ்நிலையிலும் தனது கணவனை விட்டு பிரியாமல் இருக்கும் இவர்கள், தங்களின் துணையின் மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள். அதனால், இந்த ராசி பெண்களை திருமணம் செய்து கொண்டால், கட்டாயம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு.
ரிஷபம்
குடும்ப நடத்தைக்கு சிறந்தவர்களாக கருதப்படும் ரிஷப ராசி பெண்கள், குடும்பத்தில் உள்ள அனைவரையும் நன்கு கவனித்துக் கொள்வார்கள். தனது கணவருக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் இந்த ராசி பெண்களை திருமணம் செய்து கொள்வதால், கணவருக்கும் பண பலன்கள் கிடைப்பதோடு அதிர்ஷ்டம் இருக்கும்.
கன்னி
யாரிடமும் மிகவும் அக்கறை கொண்ட கன்னி ராசி பெண்களை திருமணம் செய்து கொண்டால், அவள் சிறந்த மனைவியாக இருப்பால். கணவனை விட உயர்ந்த பதவியில் இருந்தாலும், அவள் சிறிதும் பெருமை இல்லாமல் கணவனை நன்கு கவனித்துக் கொள்வாள்.
மகரம்
லட்சியம், உந்துதல் மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற மகர ராசி பெண்கள், மிகவும் பொறுப்பானவர்கள். இதனால் அவர்கள் சிறந்த மனைவியாக இருப்பார்கள். சிறந்த ஆலோசகரான இந்த ராசி பெண்களை திருமணம் செய்து கொண்டால், உங்கள் தொழிலில் வெற்றி அடைவதுடன், வாழ்வில் முன்னே முடியும்.
மீனம்
படைப்பாற்றல், கருணை மற்றும் உள்ளுணர்வு அதிகம் கொண்ட மீன ராசி பெண்கள், அதிக காதல் உடையவர்கள். இதனால் அவர்கள் எப்போதும் ஒரு சிறந்த மனைவியாக இருப்பார்கள்.