தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரை திருமணம் செய்தது நான் செய்த மிகப்பெரிய தவறு என பிரபல நடிகை பேட்டி அளித்திருக்கிறார். இந்த பேட்டி தற்போது சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமா இயக்குனர்களில் என்றுமே மறக்க முடியாதவர் மறைந்த இயக்குனர் மகேந்திரன். இவர் முள்ளும் மலரும் உதிரிப்பூக்கள் ஜானி போன்ற தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களை கொடுத்தவர். இவரும் நடிகை ப்ரேமியும் திருமணம் செய்து கொண்டனர். 7 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் மகேந்திரனை திருமணம் செய்தது தான் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என நடிகை பிரேமி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் நடிகர் மகேந்திரன் மறைந்த நடிகர் செந்தாமரையின் மூலம் எனக்கு அறிமுகமானார். உதிரிப்பூக்கள் படத்தில் நாங்கள் பணியாற்றிய போது எனக்கும் மகேந்திரனுக்கும் காதல் மலர்ந்தது.
அவர் திருமணமானவர் என தெரிந்தும் இரண்டாவதாக அவரை திருமணம் செய்தேன். ஏழு ஆண்டுகள் என்னோடு வாழ்ந்த அவர் பிறகு என்னை பிரிந்து தனது முதல் மனைவியுடன் சென்றுவிட்டார். அந்தக் காலகட்டங்களில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் கி தனியாலாக எனது மகனை வளர்த்து ஆளாக்கினேன். அந்தக் காலகட்டங்கள் என் வாழ்வின் கடினமான பக்கங்கள் என தெரிவித்திருக்கிறார்.