fbpx

இனி பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்.. மாநில அரசு அறிவிப்பு..

பஞ்சாப் மாநிலத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது..

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.. நாள் ஒன்றுக்கு சராசரியாக 15000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.. எனவே கொரொனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளது.. சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இதை தொடர்ந்து மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன.. அதன்படி பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்று டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது..

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. பஞ்சாப் மாநில அரசு, வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், உட்புற மற்றும் வெளிப்புற கூட்டங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது..

கடந்த ஒரு வாரமாக பஞ்சாபில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.. கொரோனா வைரஸ் பரவலை சமாளிக்க தயாராக இருக்குமாறு முதல்வர் பகவந்த் மான் சுகாதாரத் துறை அதிகாரிகளை அறிவுறுத்தி இருந்தார்.. மேலும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

நெய்வேலி டவுன்ஷிப்பில் பிரபல ரவுடி வெட்டி கொலை... பரபரப்பு சம்பவம்..!

Sat Aug 13 , 2022
கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 30-ல் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் வசிந்து வந்தவர் வீரமணி (43). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபல ரவுடியான வீரமணி மீது நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள தெர்மல் காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் பத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வீரமணியின் மனைவி மற்றும் குழந்தைகள் அவர்களது சொந்த ஊருக்கு […]

You May Like