லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். AGS நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெய்ராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 90-களில் கொடிகட்டி பறந்த பிரசாந்த், இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் அவருக்கு கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு வரும் நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் ஜூலையில் வெளியாகலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது செப்டம் 5ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா சென்றனர். இந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார் இயக்குனர் வெங்கட் பிரபு.
இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கிய பங்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்யா ஷெட்யூலை முடித்து சென்னை திரும்பிய விஜய் மீண்டும் கிராபிக்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. மேலும், அமெரிக்காவின் லேஸ் வேகாஸில் விஜய் தொடர்பான கிராபிக்ஸ் பணிகள் நடந்தது. இந்நிலையில், தனக்கு சம்மந்தமான கிராபிக்ஸ் பணிகள் முடிந்ததால் விஜய் நேற்றிரவு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். இதைத் தொடர்ந்து சிறிது காலம் ஓய்வெடுக்கும் விஜய், பின்னர் கோட் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் அடுத்த படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமே தனது கடைசி படம் என்று அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்ட போது விஜய் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Read More : ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால் உங்களுக்கு இந்த பிரச்சனைகள் வரும்..!! எச்சரிக்கும் நிபுணர்கள்..!!