fbpx

ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை..!! பிரபல இந்திய நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!!

எப்போது பார்த்தாலும், வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கும் ஆண்களே தற்போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எப்படி மகப்பேறு கால விடுமுறை வழங்கப்படுகிறதோ, அதேபோல ஆண்களுக்கு இனி மகப்பேறு கால விடுமுறை கிடைக்க இருக்கிறது. அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இதனை பற்றி நாம் அறிந்திருக்கக்கூடும். பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுமுறைகள் சுமார் 26 வாரங்கள் அதாவது சுமார் 6 மாத காலங்கள் ஆகும். இதுவரை பெண்களுக்கு மட்டுமே இதுபோன்ற விடுமுறைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி தந்தையாகும் ஆண்களுக்கும் 3 மாத விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை..!! பிரபல இந்திய நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!!

அதுவும் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியினை இந்திய நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த முன் உதாரணமான முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. பல்வேறு அயல்நாடுகளில் இதுபோன்று தந்தையாகும் ஆண்களுக்கு மகப்பேறு விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டு இந்தியாவில் உள்ள ஆண்மகன்கள் பலரும் கவலைப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்திய ஆண்களுக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது. இந்தியாவின் பிரபல ஃபைசர் நிறுவனம் தான் ஆண்களுக்கான இந்த சலுகையை அறிவித்துள்ளது.

இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை..!! பிரபல இந்திய நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!!

ஃபைசர் நிறுவனம் ஆண் ஊழியர்களுக்கு 12 வார மகப்பேறு விடுப்பு கொள்கையினை அமல்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கையின் மூலம் தந்தையாகும் ஆண், குழந்தை பிறந்த நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு நேரத்தில் குறைந்தது இரண்டு வாரங்கள் மற்றும் அதிகபட்சம் 6 வாரங்கள் விடுமுறை பெற முடியும். மேலும், இந்த விடுமுறை வளர்ப்பு தந்தைகளுக்கு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

Chella

Next Post

#தர்மபுரி: வேலை செய்ய சொன்னது குத்தமா.. அவசரப்பட்டு உயிரை விட்ட பள்ளி மாணவி..! 

Sun Jan 8 , 2023
தர்மபுரி மாவட்டம் கீழ கொள்ளுப்பட்டியில் வசிக்கும் விவசாயி மாரியப்பன் என்பவருக்கு கவிப்பிரியா என்ற மகள் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கவிப்பிரியாவின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இதனால், மாரியப்பன் தனது மகளிடம் மாட்டுக்கு புல் அறுத்து போடும்படியும், சமைப்பதுடன், வீட்டு வேலைகளையும் செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் கவிப்பிரியா தண்ணீரில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார். […]

You May Like