Probability இன்று சொல்லப்படும் நிகழும் தகவை கையாள்வதற்காக தமிழக அரசின் பாட புத்தகங்களில் பகடை மற்றும் சீட்டுக்கட்டு கணக்குகள் இடம் பெற்றுள்ளனர். அதில் சீட்டுக்கட்டு கணக்குகள் மாணவர்கள் இடையே தவறான எண்ணத்தை உண்டாக்குவதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அனைத்து வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் இருந்தும் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கப்படுவதாக தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக பத்தாம் வகுப்பு பாடத்தில் சீட்டு கட்டு குறித்த 5 வினாக்கள் நீக்கப்பட்டு புதிதாக 2 வினாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு இணையதள சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் இயற்றியுள்ள நிலையில் பாடப் புத்தகத்திலிருந்தும் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கப்பட்டுள்ளனர். அனைத்து வகுப்புகளுக்குமான தமிழக அரசின் பாடப் புத்தகங்களில் இருந்து சீட்டுக்கட்டு கணக்குகள் தொடர்பான பகுதி நீக்கப்பட்டுள்ளது.
அதோடு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் நிகழ் தகவு பகுதியில் இதுகுறித்த 5 வினாக்கள் நீக்கப்பட்டு 2 வினாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.