இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் தருமபுரி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தங்கள் பொருட்கள் மற்றும் தயாரிப்பு பொருட்களை மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் மதி எக்ஸ்பிரஸ் வண்டியின் மூலம் விற்பனை செய்து கொள்ள மாவட்டத்திற்கு 3-மதி எக்ஸ்பிரஸ் வண்டிகள் இலக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது. இது தொடர்பாக பின்வரும் தகுதியான விண்ணப்பத்தார்களிடமிருந்து விண்ணங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்:
மதி எக்ஸ்பிரஸ் (Mathi Express) வண்டிகளுக்கு விண்ணப்பிக்க தேசிய ஊரக வாழ்வாதார இணையதளத்தில் NRLM Portal பதிவு பெற்ற மாற்றுத்திறனாளிகள்/சிறப்பு சுப உதவிக்குழுக்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். உறுப்பினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இணைந்திருக்கவேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை மற்றும் ஒற்றை பெற்றோராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகன உரிமம் கட்டாயம் பெற்றிருத்தல் வேண்டும். பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆர்வம் உடையவராக இருத்தல் வேண்டும்.
சிறப்பு சுய உதவிக்குழுவில் மாற்றுத்திறனாளிகள், உறுப்பினர்களாகி ஓராண்டு நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில்வாகன அங்காடி பறிமுதல் செய்யப்படும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் மீது எந்த ஒரு புகார்களும், வங்கி மற்றும்சமுதாய அமைப்புகளில் வாராக்கடன் ஏதும் இல்லை எனவும் சான்றிதழ் வழங்க வேண்டும்.