அரசு வேலையில் சேர்வதற்கான அதிகபட்ச வயதை 2 ஆண்டுகள் அதிகரிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா காரணமாக அரசு பணிக்க்கு விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மகாராஷ்டிர அரசு சார்பில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி, அம்மாநிலத்தில் அரசு வேலையில் சேர்வதற்கான அதிகபட்ச வயதை 2 ஆண்டுகள் அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்களைக் கொண்டு கூடுதல் பணியிடங்களை நிரப்பவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.. பொதுப்பிரிவில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, புதிய அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகவும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 45 ஆகவும் உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது… இந்த கோரிக்கையை ஏற்று வயது வரம்பை தளர்த்த முடிவு எடுக்கப்பட்டது. எனினும் அதிக வயது வரம்பு டிசம்பர் 31, 2023 வரை மட்டுமே தளர்த்தப்படும்.
இந்த தளர்வு வெவ்வேறு வயது வரம்புகள் அமைக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் விண்ணப்பதாரர்கள் அறிந்திருக்க வேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்கு, இந்த கட்டுப்பாடு பொருந்தும். வயது வரம்பை தளர்த்தியதன் மூலம் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பயனடைவார்கள்.