மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணீருடன் அவருக்கு விடை கொடுத்து அனுப்பினர். நடிகர் மயில்சாமி நேற்று உடல் நல குறைவு காரணமாக, திடீரென்று மரணம் அடைந்தார்.
இந்த நிகழ்வு திரையுலகை சார்ந்த நட்சத்திரங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மயில்சாமியின் உடலுக்கு திரை உலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அவர் இவ்வளவு விரைவில் கூடாது என்று தெரிவித்து கண்ணீர் விட்டு அழுதனர் சினிமா பிரபலங்கள்.
இன்று காலை சாலை கிராமத்தில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் இருந்து நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. இதில் திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பங்கேற்றுக் கொண்டனர்.
வீட்டிலிருந்து மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மயில்சாமியின் உடலுக்கு அவருடைய மகன் இறுதிச் சடங்கை செய்து முடித்தார் இறுதிச் சடங்கு முடிவடைந்த நிலையில் மயில்சாமியின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.