மயோனைஸ் மட்டுமே உணவாக சாப்பிடும் மயோனைஸ் பிரியர்கள் பலர் உள்ளனர். ஆம், சாண்ட்விட்ச், பர்கர், சிக்கன் பார்பிக்யூ, க்ரில் என அனைத்திற்கும் மயோனைஸ் வேண்டும். இல்லையென்றால், அது உப்பில்லா உணவாகிவிடும். முழுக்க முழுக்க முட்டை வெள்ளைக்கரு, எண்ணெய், சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு ஆகிய பொருள்களால் தயாரிக்க்கும் மயோனைஸ் நம் உடம்பிற்கு நல்லதா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு மிகவும் பிடித்த மயோனைஸ், பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான உணவுப் பொருள் என்றால் நம்ப முடியுமா?? ஆம், இதை சரியாக சேமித்து ஃபிரிட்ஜில் பராமரிக்காவிட்டால், ஒரே நாளில் கெட்ட கிருமிகள் இனப்பெருக்கம் செய்துவிடும் என ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. கடைகளில் விற்கப்படுவதில் பதப்படுத்த தேவையான மூலக்கூறுகள் சேர்க்கப்படுகின்றது. இதனால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதோடு, புற்று நோய், இதய நோய், கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதேபோல் இதில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துவத்தால், ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகளைக் கொண்டிருக்கும். எனவே இது உடலில் கலோரி அளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரித்து விடும். அப்படி உங்களால் மயோனைஸ் இல்லாமல் சாப்பிட முடியாது என்றால் அதற்க்கு மாற்றாக தற்போது கிடைக்கும் குறைந்த கொழுப்பு கொண்ட மயோனைஸ் சாப்பிடலாம். அது சுவை சற்று குறைவாக இருந்தாலும், உடல் எடைக் குறைக்க நினைப்போருக்கு இது சிறந்தது.