fbpx

எம்பிபிஎஸ், பிடிஎஸ்..!! ஆன்லைனில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 12ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு இருக்கிறது. அதே போல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.

இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக கணக்கிடப்படுகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக்கல்வி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு ஜூன் 28ஆம் தேதி தொடங்கியது. மேலும், ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரை https://www.tnhealth.tn.gov.in/ மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

ஜூலை 12ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியலை வெளியிடப்படவுள்ளது. அதைத் தொடா்ந்து கலந்தாய்வைத் தொடங்க மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

Chella

Next Post

கோடநாடு விவகாரத்தை கையிலெடுத்த ஓபிஎஸ்..!! ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம்..!!

Tue Jul 11 , 2023
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 1ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகுதூர் கொலை செய்யப்பட்டு அங்குள்ள முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் […]

You May Like