”இதுதான் என் கடைசி வீடியோ, நானும் என் அக்காவும் சாக போகிறோம்” என்று நடிகை விஜயலட்சுமி உருக்கமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து விஜயலட்சுமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”இதுதான் என் கடைசி வீடியோ. நானும் எனது சகோதரியும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சாவை நோக்கி பயணிக்க போகிறோம். நான் மட்டும் போய்விட்டால் என் அக்காவை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை. எங்களுடைய இந்த முடிவுக்கு சீமானும், நாம் தமிழர் கட்சியும் அவர்கள் கொடுத்த டார்ச்சரும்தான் காரணம்.
2011இல் நான் சீமானுக்கு எதிராக வழக்கு தொடுத்த போது இப்படித்தான் என்னை துன்புறுத்தி, அச்சுறுத்தி என்னை காங்கிரஸ் கட்சி தூண்டிவிட்டுதான் வழக்கு கொடுத்தேன் என பொய் கூறினர். அந்த சமயத்தில் வழக்கு விசாரணையை கூட அவர்கள் தடுத்தனர். 12 வருடங்கள் கழித்து பாலியல் விஷயத்தை என்னால் நிரூபிக்க முடியாது என நினைத்துக் கொண்டு மீண்டும் டார்ச்சர் செய்து என் மீது மான நஷ்ட ஈடு வழக்கு போடுவேன் என்கிறார். இத்தோடு போதும். நான் என்ன முடிவு செய்திருக்கிறேன் என்றால், என்னையும் என் அக்காவையும் யாரும் வாழ விடமாட்டார்கள்.
எனவே, இன்று முதல் நானும் என் அக்காவும் சாப்பாடு சாப்பிடுவதையும், தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தப் போகிறோம். நாங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க சீமானும் அவரது கட்சியும்தான் காரணம். அதிலும் முக்கிய காரணம் சீமான்தான். இதை காவல்துறைக்கு சொல்கிறேன். இந்த பிரச்சனையை பேசி தீர்க்காமல் கட்சியை வைத்துக் கொண்டு என்னை துன்புறுத்துகிறார்.
அசிங்கமாக பேசி, மன ரீதியில் துன்புறுத்தி, நான் 4 பேருடன் குடித்தனம் நடத்தியதாக சீமான் அவதூறு கூறி, கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இதனால் நான் இனியும் வாழ மாட்டேன். நான் செத்த பிறகாவது சீமானை கைது செய்யுங்கள். அவரை தப்பிக்க விடாதீர்கள். நான் சாக வேண்டும் என்பதுதான் சீமானின் ஆசையாக இருந்துச்சு..! இதற்கு மேல் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. 12 ஆண்டுகளாக நரக வேதனையை அனுபவித்துவிட்டேன். விடியல் கிடைக்கும் என நினைத்து வந்தேன். ஆனால், கிடைக்கவில்லை.
எனவே, இந்த பிரச்சனைக்கு நாங்கள் முடிவு கொடுத்துக் கொள்கிறோம். நானும் என் அக்காவும் முடித்துக் கொள்கிறோம். காவல்துறை என்றைக்கும் சீமானையும் நாம் தமிழர் கட்சியையும் விடாதீர்கள். எனவே, உறுதியாக சாப்பாடு தண்ணீர் அருந்துவதை நிறுத்த போகிறோம். இதன் பிறகாவது சீமானை கைது செய்து என்ன ஆக்ஷன் எடுக்க வேண்டுமோ அதை எடுங்கள். இதுதான் என் கடைசி வீடியோ, எல்லாருக்கும் மிகவும் நன்றி“ என்று விஜயலட்சுமி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.