தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை இறைச்சி கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; தமிழக அரசு உத்தரவின் 16-ம் தேதி திங்கள்கிழமை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அதிகாலை 12 மணி இரவு 12 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எங்கும் ஆடு,மாடு, கோழி முதலான எந்தவித உயிரினங்களையும் இறைச்சிக்காகவோ, அல்லது வேறு எந்த காரணங்களுக்காகவோ, வதை செய்யவோ அல்லது மாமிசங்களை விற்பனை செய்யவோ கூடாது.
மேலும் மீறி விற்பனை செய்தாலோ அல்லது வதை செய்தாலோ அந்த மாமிசங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, விற்பனை மற்றும் வதை செய்பவர்கள் மீது தக்க மேல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தொழில் மற்றும் விற்பனை செய்வோர் மாநகராட்சிக்கு தகுந்த
ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.