இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருபவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.18,073, பி.டி.எஸ். படிப்பில் சேருபவர்களுக்கு ரூ.16,073, இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு வரை அரசு கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு ரூ.13,610, பி.டி.எஸ். படிப்பில் சேர ரூ.11,610 கட்டணமாக இருந்தது.
இதேபோல், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் வேலூர் கிறிஸ்தவ கல்லூரியில் ரூ.53,000 கட்டணமாக உள்ளது. என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் கடந்த ஆண்டை விட ரூ.1 லட்சம் அதிகமாக உயர்த்தி, ரூ.24 லட்சத்து 50 ஆயிரமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.