fbpx

அமலாக்கத்துறை வைத்த மெகா செக்..!! திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்..!!

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அவரது உறவினர்கள் இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்நிலையில், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 89 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்திருப்பதாகவும், ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல ஆண்டு காலமாகவே சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் திமுக எம்பி ஜெயத்ரட்சகன் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த 2020இல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில், அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்தாண்டு ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய  70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில், ஜெகத்ரட்சகனுக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Read More : பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் தூக்கு..!! மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!!

English Summary

The Enforcement Department has imposed a fine of Rs 908 crore on DMK MP Jagadratsaka.

Chella

Next Post

மீண்டுமா..? செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57-வது முறையாக நீட்டிப்பு..!! நீதிபதி அல்லி உத்தரவு..!!

Wed Aug 28 , 2024
Senthil Balaji's judicial custody extended for 57th time

You May Like