tsunami: ஜப்பானின் கார்டூன் கலைஞரும் தீர்க்கதரிசி என்றழைக்கப்படும் ரியோ தட்ஸுகி என்ற 70 வயதுடைய நபர், தனது அதிசயமான முன்னறிவிப்புகளால் இணையத்தில் வைரலாகி வருகிறார். அவருடைய முன்கணிப்புகளில் பல தற்போது வரை உண்மையாகி இருக்கின்றன என்றும் அந்தவகையில், ஜூலை 2025 இல் பேரழிவு தரும் சுனாமி தாக்க உள்ளது என்றும் கணித்துள்ளார்.
1999-ம் ஆண்டு வெளியான “The Future That I Saw” என்ற நாவலால் புகழ் பெற்றவர் ரியோ தட்ஸுகி. இந்த புத்தகத்தில், தன்னுடைய கனவுகளில் வந்த நிகழ்வுகளை பல வருடங்கள் பதிவு செய்து வந்தார். அவற்றில் பல நிகழ்வுகள் உண்மையாகி உலக அளவில் ஏற்பட்ட பேரழிவுகளை குறித்ததாக அவர் கூறுகிறார். இந்தநிலையில் தற்போது, இணையத்தில் பலர் அவரது புத்தகப் பக்கங்களை ஆராய்ந்து, புதிய முன்கணிப்புகள் என்ன என்பதை தேடி படித்துவருகின்றனர்.
1995-ல் நடந்த கோபே நிலநடுக்கம் மற்றும் 2011-ல் நிகழ்ந்த “பெரிய கிழக்கு ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் சுனாமி” ஆகியவற்றை துல்லியமாக முன்னறிவித்ததாகக் கூறப்படுவதால், “The Future That I Saw” என்ற நாவல் புத்தகம் மீண்டும் பிரபலமடைந்தது. அதிலும், அதே புத்தகத்தில் உள்ள ஒரு அத்தியாயம் மிகக் கவலைக்கிடமான தலைப்பில் உள்ளது. அதாவது, “March 2011 Great Disaster Comes”(2011 மார்ச் — ஒரு பெரிய பேரழிவு வரப்போகிறது) என்ற அத்தியாயம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mashable வெளியிட்ட செய்தியின்படி, ரியோ தட்ஸுகியின் கனவு டையரி, மிகச் சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சி தரும் முன்கணிப்புகளை பதிவு செய்துள்ளது. அவற்றில், இளவரசி டயானா மற்றும் ஃப்ரெடி மெர்குரியின் இறப்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளன, இதனுடன், மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று 2020-ல் ஒரு மர்மமான வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயர் உச்சத்தை அடையும் என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது, இது கொரோனா வைரஸின் எச்சரிக்கைதான் என்றும் பலர் கூறிவருகின்றனர். மேலும், அந்த வைரஸ் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் வரும் என்று ஒரு எச்சரிக்கையும் இடம் பெற்றுள்ளது. அதாவது, 2030-ம் ஆண்டு பிறகு இன்னொரு அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2025 சுனாமி எச்சரிக்கை: “The Future That I Saw” என்ற புத்தகத்தின் முழுப் பதிப்பில், ரியோ தட்ஸுகி ஒரு மிகப்பெரிய சுனாமி குறித்த தனது கனவுக்காட்சியை மிகவும் விபரமாக விவரித்துள்ளார்.இந்த சுனாமி ஜப்பான் சந்தித்திருக்கும் எந்த பேரழிவை விட பெரிதாகவும், மோசமாகவும் இருக்கும்! வடக்கு மரியானா தீவுகள், இந்தோனேசியா, தைவான் மற்றும் ஜப்பானை இணைக்கும் வைர வடிவ மண்டலத்தில் “மாபெரும் குமிழ்கள்” எழும்பி “ஜப்பானுக்கு தெற்கே வரலாற்றிலேயே இல்லாத அளவிலான ஒரு மிகப் பெரும் சுனாமியை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. “2011-ம் ஆண்டு வந்த சுனாமியைவிட மூன்று மடங்கு பெரியதாக இந்த சுனாமி இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான், பூகம்பங்களும் அலகுகளும் அதிகம் நடைபெறும் பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் (Pacific Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளது. இதையறிந்த பலரும், ரியோ தட்ஸுகியின் இந்த முன்கணிப்பை சாதாரணமான காமிக் புத்தகக் கற்பனை என்று அல்லாமல், ஏதோ உண்மையை அடிக்கோடாக சொல்லும் எச்சரிக்கையாகவே பார்க்கத் தொடங்கியுள்ளனர். பொதுவாக ஒரு காமிக் புத்தகத்தில் வந்த கணிப்புகளை யாரும் கவனிக்க மாட்டார்கள். ஆனால், Tatsuki-யின் முன்னறிவிப்புகள் கடந்த காலத்தில் பல முறை உண்மையாகி இருப்பதால், ஜூலை 2025 சுனாமி முன்கணிப்பு இப்போது பலரையும் அச்சுறுத்தி வருகிறது. இதே நேரத்தில், சிலர் இதை குறை கூறி, இதெல்லாம் சாதாரண கனவுகளும், கதைகளும் மட்டுமே; உண்மையை நிரூபிக்கும் விஞ்ஞான ஆதாரம் தேவை” என்று தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
Readmore: தூள்..! எரிவாயு மீட்டர்களுக்கான வரைவு விதிகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது..!