fbpx

உருக்கம்!… என்ன நேர்ந்தாலும் இறுதி தருணம் வரை காஸாவில் மருத்துவ சேவை தடைபடாது!

எது நேர்ந்தாலும் இறுதி தருணம் வரை நோயாளிகளுக்கான மருத்துவ சேவை தடைப்படாது என காஸாவின் அல்-ஷிபா மருத்துவனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த அக். 7-ம் தேதி காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போரினால் இதுவரை (நவ.7) 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 குழந்தைகளும் பலியாகி உள்ளனர்.

கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவின் அல்-ஷிபா மருத்துவமனை அமைந்துள்ள பகுதியிலும், மருத்துவமனை வளாகத்திலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நோயாளிகளும் மற்றும் மருத்துவ குழுவினர் தவிர்த்து 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், எந்நேரமும் இஸ்ரேலின் ட்ரோன்கள் அவர்களை கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீர், உணவு, எரிபொருள் இல்லாத நிலையில், தற்போது மின்சாரமும் முற்றிலும் தடைப்பட்டுள்ளதால் இதுவரை 5 பேர் இறந்துள்ளதாகவும், இன்குபேட்டர்கள் இயங்காததால் ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் இறப்பு இன்னும் சில நிமிடங்களில் இருப்பதாகவும், எது நேர்ந்தாலும் இறுதி தருணம் வரை நோயாளிகளுக்கான மருத்துவ சேவை தடைபடாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ஹமாஸின் கட்டுபாட்டு அறையாகவும், புகலிடமாகவும் அல்-ஷிபா மருத்துவமனை செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டி இந்த தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.

Kokila

Next Post

எல்லையில் களைகட்டிய தீபாவளி!… சிஆர்பிஎப் வீரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகம்!

Sun Nov 12 , 2023
ஜம்மு – காஷ்மீர் எல்லையில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், சில சிறிய பட்டாசுகளை வெடித்தும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎப்) 76-வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பணியின் இடையே மெழுகுவர்த்திகளை ஏந்தியபடியும், சில சிறிய பட்டாசுகளை வெடித்தும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டுப்பற்று […]

You May Like