fbpx

பேருந்துகளில் பெண்களை ஆண்கள் முறைத்து பார்க்க கூடாது.. தமிழக அரசு எச்சரிக்கை..

பேருந்துகளில் பெண் பயணிகளை முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயணித்து வருகின்றனர். இந்த பயணத்தின்போது, சக ஆண் பயணிகளால் பெண்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை நோக்கி முறைத்து பார்த்தல்,  கூச்சலிடுதல், பாலியல் ரீதியாக சைகை காட்டுதல், புகைப்படம் எடுத்தல் போன்றவை செய்யும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. நடத்துநர்களின் எச்சரிக்கையை மீறி செயல்படும் ஆண்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது..

Maha

Next Post

‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் காலமானார்.. தமிழறிஞர்கள், தலைவர்கள் இரங்கல்...

Thu Aug 18 , 2022
தமிழறிஞரும், பேச்சளாருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 77. சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் ‘தமிழ் கடல்’ என அழைக்கப்பட்டார்.. தமிழ் இலக்கிய உலகத்தின் தவிர்க்க முடியாத பேச்சாளராகவும் இருந்தார்.. 1970-ம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் நெல்லைக் கண்னனின் தமிழ் ஒலித்து வந்தது.. நெல்லை கண்ணன் பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர்.. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் […]

You May Like