fbpx

உடலுறவில் சுயநலமாக இருக்கும் ஆண்கள்..!! உச்சகட்டத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்கள்..!! அதிர்ச்சி

தாம்பத்தியம் என்பது இல்லற வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ளது. கணவன், மனைவி என இருவருக்கும் இடையே திருப்தி அடைவது முழுமையான தாம்பத்தியம் என கூறுகின்றன. இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்களும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதனை பல ஜோடிகள் புரிந்து கொண்டு நடப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. இதனால் பல சந்தர்ப்பங்களில் தாம்பத்திய திருப்தியின்மை ஏற்படுகிறது.

இந்நிலையில் தான் ஜோடிகள் இடையேயான உறவு குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில், ”உடலுறவின்போது ஆண்கள் அடிக்கடி உச்சக்கட்டத்தை எட்டினாலும் கூட பெண்கள் உச்சக்கட்டத்தை அடைவது இல்லை. சுயநலம் கொண்ட ஆண் துணைகளால் தான் பெரும்பலாலும் இந்த பிரச்சனையை பெண்கள் அனுபவிக்கின்றனர். இதுதவிர சூழ்நிலை, சமூகம், தனிப்பட்ட காரணங்கள் உள்ளிட்டவையும் உடலுறவின்போது பெண்கள் உச்சக்கட்டத்தை எட்டுவதற்கு தடையை ஏற்படுத்துகிறது.

மேலும், பெண்கள் ஒவ்வொரு உடலுறவின்போது கூட உச்சக்கட்டத்தை எட்டுவது தொடர்பாக குறிப்பால் வெளிப்படுத்துவதை கொண்டுள்ளனர். அதோடு உச்சக்கட்டத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் பெண்கள் அதனை எட்டுவதற்கான வாய்ப்பு என்பது அதிகமாக உள்ளது. இருப்பினும் கூட அதனை பலரும் வெளிப்படையாக தங்களின் துணைகளிடம் பகிர்ந்து கொள்வது இல்லை. இதனை பெரும்பாலான துணைகள் கேட்பதும் இல்லை. உடலுறவின் தங்களின் துணைகள் எவ்வளவு சுயநலமாக செயல்பட்டனர் என்பதையும் பெண்கள் நினைத்து பார்க்கின்றனர். இதனால் ஒவ்வொரு உறவின்போதும் ஆண்கள், பெண்களை உச்சமடைய அழுத்தம் கொடுக்காமல் அவர்களின் இன்பத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால், ஆண்களை போலவே பெண்களின் பாலியல் சார்ந்த இன்பமும் முக்கியமானது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

புர்கா அணிந்த முஸ்லீம் பெண்களை குறிவைத்து தாக்கி வடநாட்டில் கொண்டாடிய ஹோலி பண்டிகை!

Sun Mar 12 , 2023
நாடெங்கிலும் ஹோலி பண்டிகைகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது வட மாநிலம் ஒன்றில் ஹோலி பண்டிகையின் போது நடந்த மோதலை பற்றிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஹோலி பண்டிகை என்பது இந்தியாவில் கலாச்சாரம் மற்றும் மதங்களைக் கடந்து கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். இந்தக் கொண்டாட்டங்களின் அப்போது மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இது மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை கடந்து கொண்டாடப்பட்டாலும் […]

You May Like