திருச்சி சிரஞ்சீவி நகர் ஏ ஆர் கே நகரைச் சார்ந்தவர் திரேந்தர்(42) இவர் மணிகண்டம் பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகின்றார். இந்த பகுதியில் இருக்கின்ற வேப்ப மரத்தில் உடல் முழுவதும் காயங்களுடன் கயிற்றால் கட்டப்பட்ட ஒரு இளைஞர் நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மணிகண்டன் காவல்துறை ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் காவல் துறையைச் சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி சிறையில் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன் பின்னர் இது குறித்து அந்த மர அறுவை மில்லில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சார்ந்த 4 நபர்களை காவல் துறையினர் விசாரித்து இருக்கிறார்கள்.
அதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உயிரிழந்த நபர் துவாக்குடி வாண்டையார் தெருவை சார்ந்த கண்ணன் என்பவரின் மகன் சக்கரவர்த்தி(33) என்ற விபரம் தெரியவந்துள்ளது. இன்ஜினியரான இவர் மதுபானத்திற்கு அடிமையானதால் சற்றே மனநலம் பாதிக்கப்பட்டு மேலும் அதிலிருந்து மீண்டு வர சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் தான் மணிகண்டத்தில் உள்ள மர அறுவை மில்லில் உடல் முழுவதும் காயங்களுடன் அவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த மெல்லில் இருந்த மற்ற பணியாளர்களை விசாரித்த போது மர அறுவை மில்லுக்கு வருகை தந்த சக்கரவர்த்தி மில் உரிமையாளரான திரையிந்தரின் கைபேசியை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகவும், அந்த சமயத்தில் விரட்டி பிடித்து கைபேசியை பறிமுதல் செய்த பின்னர் எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அன்றைய நாள் இரவே மறுபடியும் அவர் அந்த பகுதிக்கு வந்ததால் திருடுவதற்காக வந்ததாக நினைத்து அவரை பிடித்து அந்த பகுதியில் இருக்கின்ற வேப்பமரத்தில் கட்டி வைத்து அடித்ததாகவும், அதன் பிறகு நேற்று காலை அவர் உயிரிழந்து விட்டது தொடர்பாக தெரிய வந்ததாகவும் மர அறுவை மில் பணியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சக்கரவர்த்தி திருடுவதற்காக அந்த பகுதிக்கு வருகை தந்தாரா அல்லது அவருடைய கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? என்று விசாரித்து வருகிறோம் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.