fbpx

வீட்டில் இருந்த சார்ஜரை எடுக்க சென்ற தங்கை; கேமராவில் பதிவான கட்சிகளை பார்த்து அலறிய அக்கா..

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், தனது 70 வயது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம், மீனா பெரணமல்லூர் அருகே உள்ள அவரது உறவினர் வீட்டிற்க்கு, தனது தாயுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது, சோழவரம் கிராமத்தை சேர்ந்த 65 வயதான சுப்பிரமணி என்பவர் அந்த வழியாக பைக்கில் வந்துள்ளார். அதனை பார்த்த மீனா அவரிடம் `லிப்ட்’ கேட்டுள்ளார். இதற்க்கு சுப்பிரமணி, முதலில் உனது தாயை உறவினர் வீட்டில் இறக்கிவிட்டு, பின்பு உன்னை அழைத்து செல்கிறேன் என்று கூறியுள்ளார். அதன் படி, அவர் முதலில் மூதாட்டியை அழைத்துச்சென்று உறவினர் வீட்டில் விட்டுவிட்டார்.

பின்னர், மீனாவை அழைத்து வர அவர் கிளம்பிய போது, மீனாவின் தாய், தனது வீட்டில் செல்போன் சார்ஜரை விட்டு விட்டு வந்துவிட்டதாகவும், தனது மகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று அதனை எடுத்து வரும்படியும் கூறியுள்ளார். இதற்க்கு சம்மதம் தெரிவித்த சுப்பிரமணி, மீனாவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால், சுப்பிரமணி மீனாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மீனா கதறி அழுதுள்ளார். இந்நிலையில், வெளிநாட்டில் வசித்து வரும் மீனாவின் அக்கா, தனது தாயின் பாதுகாப்பு கருதி, அவரது வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தி, கண்காணித்து வருகிறார். தனது தங்கையை சுப்பிரமணி பலாத்காரம் செய்ததை கேமராவில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, அவர் இது குறித்து ஊரில் உள்ள தனது உறவினர் மகேஸ்வரியிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் ராணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து, சுப்பிரமணியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read more: ”மக்களுக்கு போலீஸ் மீது பயம் இருக்கக் கூடாது”..!! ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக தமிழக போலீஸ்..!! முதல்வர் பெருமிதம்..!!

English Summary

mentally-upset-woman-was-raped-by-a-old-man

Next Post

ஒன்றாக குளிக்க மறுத்த மனைவி; ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்..

Wed Nov 27 , 2024
woman-who-refused-to-bath-with-her-husband-was-beaten-up

You May Like