fbpx

Merry Christmas 2024!.“அன்பெனும் மழையிலே அதிரூபன் தோன்றினானே”!. களைகட்டும் கொண்டாட்டம்!. தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை!

Merry Christmas 2024: கிறிஸ்தவ மக்களின் மிக முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான ‘இயேசு கிறிஸ்து’ அவதரித்த நாளான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டின் இறுதியில் மிகவும் மகிழ்ச்சியான பண்டிகையை வரவேற்கும் நேரம் இது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுக்கூறும் பண்டிகை இதுவாகும். மேலும் இது கிறிஸ்தவத்தில் மிகவும் புனிதமான நாள். மக்கள் தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களை அமைத்து வீட்டை விளக்குகள் மற்றும் மாலைகளால் அலங்கரித்து கொண்டாடுவார்கள்.

கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினம் இரவு அதாவது, டிசம்பர் 24ம் தேதி அன்று மக்கள் தேவாலயங்களில் நள்ளிரவில் ஆராதனைகளில் கலந்துகொள்வார்கள். இதுதவிர, பரிசுகளை பரிமாறி இதனை வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அனைவருக்கும் தெரிவிக்க யூதர்களுக்கு நட்சத்திரம் வழிகாட்டியதாக சொல்லப்படுவதால் நட்சத்திரங்கள் அனைவரின் வீடுகளிலும் தொங்க விடப்படுகிறது. ஆனால் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் முறை முதல் முதலில் எந்த நாட்டில், எதற்காக, யாரால் துவங்கப்பட்டது என பலருக்கும் தெரியாது. கிறிஸ்துமஸ் மரம் எதை குறிப்பதற்காக வைக்கப்படுகிறது, இந்த வழக்கம் எப்படி வந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கிறிஸ்துமஸ் மரத்தின் இலைகளுக்கு நடுவில் தான் சான்டாகிளாஸ் என சொல்லப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, பரிசுப் பொருட்களை வைத்து விட்டு செல்வார் என்பது நம்பிக்கை. கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது என்பது பாரம்பரிய நிகழ்ச்சியாகவே நடத்தப்படும். வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கிறிஸ்துமஸ் மரத்தில் பல வண்ணங்களில் மணிகள், பந்துகள், விளக்குகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு விதமாவிதமாக அலங்காரம் செய்வார்கள். ஆனால் இந்த கிறிஸ்துமஸ் எதற்காக வைப்படுகிறது? இதை எதை குறிக்கிறது என்ற வரலாற்று சிறப்பையும், காரணத்தையும் இங்கு தெரிந்து கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினால் அது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

கிரேக்கர்களும் ரோமானியர்களும் தான் முதன் முதலில் கிறிஸ்துமஸ் மரத்தை பண்டிகைகளின் போது வீடுகளில் வைத்து, அலங்கரித்து கொண்டாடும் பழக்கத்தை கொண்டு வந்தனர். குளிர்காலத்தின் மத்தியில் டிசம்பர் 21ம் தேதி இவர்கள் பண்டிகை கொண்டாடுவார்கள். அதே போல் ஐரோப்பியர்களும் குளிர்காலத்தை திருவிழா கொண்டாடுகிறார்கள். எப்போதும் வாடாமல் இருக்கும் மரங்களைக் கொண்ட வீடுகளை அலங்கரித்து இவர்கள் பண்டிகை கொண்டாடினர். இவ்வாறு எந்த காலநிலையில் வாடி போகாமல் இருக்கும் மரங்களை வீடுகளில் வைத்து அலங்கரிப்பதால் தீசக்திகள், பேய்கள், நோய்கள் எதுவும் நெருங்காமல் வீடுகள் பாதுகாக்கப்படுவதாக அவர்கள் நம்பினார்கள். இன்னும் சிலர் இது ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டத்தை தரும் அடையாளம் என்றும் நம்புகிறார்கள்.

உண்மையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன் முதலில் கிறிஸ்துமஸ் மரத்தை ஒரு அடையாளமாக வைத்து கொண்டாடிய நாடு ஜெர்மனி தான் என சொல்லப்படுகிறது. பிரமிடு போன்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அதில் விளக்குகள், பேப்பர்கள், ஆப்பிள்கள், நட்ஸ் போன்றவற்றை வைத்து மரத்தை போலவே அலங்கரித்து வைத்து கொண்டாடினர். இது மெல்ல மெல்ல மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே தீமைகள் விலகி, நன்மைகள் வீட்டிற்கு வருவதன் அடையாளமாக கருதப்பட்டது. கிறிஸ்துமஸ் மரம் அதிக அளவில் பிரபலமானது 16ம் நூற்றாண்டில் தான்.

16ம் நூற்றாண்டில் முதல் முதலில் மார்டின் லூதர் என்பவர் தான் கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கி, அலங்கரிக்கும் பழக்கத்தை கிறிஸ்துவர்களிடையே அறிமுகம் செய்தார். அவர் ஒருநாள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, எப்போதும் வாடாமல் இருக்கும் கரும்பச்சை நிற மரங்களுக்கு இடையே நட்சத்திரங்கள் இருப்பதை கண்டார். வீட்டிற்கு வந்த அவர், தான் கண்ட காட்சிகளை தனது பிள்ளைகளிடம் பகிர்ந்து கொண்டார். இந்த காட்சி தனக்கு இயேசு கிறிஸ்துவை நினைவுப்படுத்துவதாக கூறி உள்ளார். பிறகு தனது இந்த அனுபவத்தை தேவாலயதத்தில் இருப்பவர்களிடமும் பகிர்ந்துள்ளார். இந்த தகவல் மெல்ல மெல்ல பரவி, வீட்டில் எப்போதும் வாடாமல் இருக்கும் மரங்களில் விளக்குகளை வைத்து அலங்கரித்தால் இயேசு கிறிஸ்துவே அந்த வீட்டிற்கு வந்திருப்பதாக அர்த்தம் என மக்கள் கருத துவங்கினர்.

கிறிஸ்துமஸ் மரம் வீட்டிலும், தேவாலயங்ககளிலும் வைக்கும் போது அவற்றை அலங்கரிக்க அனைவரும் ஒன்று கூடுவதால் இது ஒற்றுமையை விளக்கும் ஒரு செயலாகவும் கருதுப்படுகிறது. இயேசு கிறிஸ்து அவதரித்து விட்டார் என உலக மக்கள் அனைவருக்கும் அறிவிக்கும் அடையாளமாகவும் மக்கள் கருத துவங்கினர். உலகின் இருளை நீக்க வந்தவர் இயேசு கிறிஸ்து என்பதால் அதை நினைவுபடுத்தும் விதமான விளக்குகளால் கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரிக்கப்படுகின்றன.

Readmore: அதிர்ச்சி!. உக்ரைனில் 3,000 வடகொரிய வீரர்கள் பலி!. ரஷ்யாவுக்கு ஆதரவளித்ததால் பேரிழப்பு!

Kokila

Next Post

விரைவில் பாஜக தேர்தல்... வரும் 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை...!

Wed Dec 25 , 2024
BJP elections coming soon... Union Home Minister Amit Shah to visit Tamil Nadu on 27th

You May Like