fbpx

ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரூ.8 ஆயிரம் கோடி செலவு செய்த மெட்டா நிறுவனம்..!! ஷாக்கிங் தகவல்..!!

ஊழியர்களை பணிநீக்கம் செய்ய, 8 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்ததாக மெட்டா நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், தொடர்ந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் 2023ஆம் ஆண்டின் காலாண்டு முடிவுகளை, பரிமாற்ற அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது. இதில் மெட்டா நிறுவனத்தின் பணி நீக்கத்திற்காக, செலவு செய்யப்பட்ட தொகையை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பணி நீக்கம் செய்ய ஊழியர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது என்பது பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளது. அதன்படி ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8 ஆயிரம் கோடி செலவாகியிருப்பதாக, மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. பணி நீக்க ஊதியம், பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் கொடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட இதர பலன்கள், இவையெல்லாம் சேர்த்து பல மில்லியன் டாலர்கள் செலவிட்டதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

பணி நீக்க நடவடிக்கைக்கு பெரும் தொகை செலவிடப்பட்ட போதிலும், மெட்டா நிறுவன வருவாயில் இது நல்ல பலன்களை ஏற்படுத்தியுள்ளது. பணி நீக்க நடவடிக்கைகள் காரணமாக 2023 முதல் காலாண்டில் மட்டும், மெட்டா நிறுவனத்தின் வருவாய் 28.65 பில்லியன் டொலர்கள் ஆகும். இது முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது 3 சதவீதம் அதிகம் என தெரியவந்துள்ளது. மேலும் கடந்த மார்ச் 31, 2023 வரையிலான காலகட்டத்தில் பணிநீக்க நடவடிக்கைகளை நிறைவு செய்து, டேட்டா சென்டர் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மெட்டா தெரிவித்துள்ளது.   

Chella

Next Post

Actress Suicide..!! நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!! உள்ளாடையில் இருந்த விந்தணு..!! நடந்தது என்ன..?

Thu Jun 1 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்த நடிகை அகன்ஷா துபே சில மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுவயது முதலே நடனம், நடிப்பு மீது ஆர்வம் கொண்ட இவர், டிக்டாக்கில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார். இன்ஸ்டாகிராமிலும் பிரபலமான அகன்ஷா துபேவுக்கு மில்லியன்கணக்கான பாலோவர்கள் இருக்கின்றனர். தொடர்ந்து மாடலாக வலம்வந்த அகன்ஷா துபே, 17 வயதில் சினிமாவில் அறிமுகமானார். சில படங்களில் நடித்து வந்த இவர், வாரணாசியில் படப்பிடிப்புக்காக […]

You May Like