சென்னையில் இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து
பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக இன்று முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகிறது. வழக்கமான 2,100 உடன் 4,830 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 6,459 பேருந்துகள் இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகான நாட்களில் மொத்தம் 17,589 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பேருந்துகளை முன்பதிவு செய்ய கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், கிளாம்பாக்கம் என 11 முன்பதிவு மையங்கள் செயல்படும். பொதுமக்கள் tnstc.in என்ற இணையதளத்திலும், tnstc அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.